முதலீடு செய்வதற்கு முன் கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்:
வணக்கம்:
முதலீடு செய்வதற்கு முன் கடைபிடிக்கவேண்டிய சில வழிமுறைகள்:
1. வருமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் கணக்கீடு செய்தல்:
மாத வருமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகள் எ.கா: மருத்துவ செலவு , உணவு மற்றும் வாடகை உள்ளிட்டவைகளை கணக்கீடு செய்யவேண்டும்.
இதன் விகிதம் மொத்த குடும்ப வருமானத்திலிருந்து 60% மிகாமல் இருக்கவேண்டும்.
2. பட்ஜெட் ( மாதம் மற்றும் வாரம் )
அன்றாட செலவுகள் மற்றும் எதிர்வரும் செலவுகளை ( வாடகை , பள்ளிகட்டணம் போன்ற தெரிந்த செலவுகள்) பட்டியிலடவேண்டும்.
3. மருத்துவ காப்பீடு ( Health Insurance)
மிக முக்கியமான ஒன்று மருத்துவ காப்பீடு இது குடும்பத்திற்கு முழுவதும் சேர்த்து எடுப்பது நன்று. சரியான மருத்துவ காப்பீடு எடுக்கவேண்டும் கம்பெனி, சேவைகள், SUM Assured மற்றும் பயன்கள் மிக தெளிவாக பார்க்கவேண்டும்.
4. தேவை மற்றும் நோக்கம் முடிவு செய்தல்:
அத்தியாவசிய தேவைகள் போக மீதம் இருக்கும் பணத்தின் தேவை மற்றும் நோக்கம் என்னவென்று சரியான முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த பணம் தேவை என்று முடிவெடுத்தல் வேண்டும். எ.கா: கல்யாணம், வீடு வாங்குதல், தொழில் தொடங்குதல் போன்றவை..
*குறுகிய காலத்தில் வேண்டும் என்றால் சேமிப்பு என்றும் நீண்ட காலத்திற்கு பின் என்றால் முதலீடு என்று வரையறை செய்யவேண்டும்.
5. ரிஸ்க் மதிப்பீடு செய்தல் ( Evaluation of Risk)
முதலீடு என்றாலே ரிஸ்க் கட்டாயம் இருக்கும் எந்த அளவிற்கு ரிஸ்க் இருக்கிறதோ அந்த அளவிற்கு லாபம் இருக்கும். தங்களால் எந்த அளவிற்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை முடிவு எடுக்கவேண்டும்.
6.முதலீடு தொடர்பான ஆவணங்களை விளக்கமாக படிக்க வேண்டும்.
எந்தவொரு முதலீடு , சேமிப்பு மற்றும் காப்பீடு போன்றவற்றின் ஆவணங்களை தெளிவாக படிக்க வேண்டும். அதிலுள்ள ரிஸ்க், முதிர்வு களம் போன்றவற்றை தெரிந்துகொண்டு முதலீடு செய்யவேண்டும்.
மேலும் தகவலுக்கு மற்றும் முதலீடு தொடர்பான தகவல்களுக்கு கமெண்ட் செய்யவும்.
நன்றி!
சில்லறை உண்டியல்
Comments
Post a Comment