பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கட்டாயம் இந்த தொடரை படியுங்கள்!
பதிவு : 2 பாகம் : 1
முதலீடு என்றாலே அதிகம் நம் காதுகளில் ஒலிப்பது முதலீடு இரண்டு மடங்காக கிடைக்கும் , 100 % திரும்ப கிடைக்கும் என பார்த்திருப்பீர்கள்!
ஆம்! இதில் உண்மையும் உண்டு தவறான கூற்றும் உண்டு.
உங்கள் இன்சூரன்ஸ் அட்வைசர் உங்களை ஏமாற்றுகிறார் என்றால் நம்புவீர்களா ?
10- இல் 9 பேர் உங்களை ஏமாற்றுகிறார்கள் ... இந்த 9 பெரும் முறையான பயிற்சியோ? படிப்போ? அனுபவமோ இல்லாதவர்கள். ஆகவே நீங்கள் முதலீடு பற்றிய ஆலோசனை பெரும் முன் சரியான ஆலோசகரா என உறுதி படுத்திகொள்ளுங்கள். ஒரு ஆராய்ச்சி தமிழ்நாட்டில் மேற்கொண்டபோது இந்த தகவல் நம்மை அதிச்சிக்கு உள்ளாக்கியது. 92 % நபர்கள் வெறும் 10, 12 ஆம் வகுப்புகளே படித்தவர்கள். மேலும் ஆங்கிலத்தில் சரியாக வாசிக்க கூட முடியாதவர்கள்.
எப்படி உறுதி செய்வது?
முதலில் அவரது பின்புலத்தை விசாரியுங்கள், குறிப்பாக அவரது படிப்பு , அனுபவம், சான்றிதழ் போன்ற சில அடிப்படை கேள்விகளில் கண்டுபிடித்து விடலாம் .
மேலும் சில படி மேலே சென்று முதலீடு தொடர்பான கேள்விகளை கேளுங்கள் , அவரது முதலீடு போன்ற கேள்விகள் மூலமாக ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.
முதலீடு தொடர்பாக அவர் கொடுக்கும் தரவுகள் உண்மையா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
------தொடரும் ...
நன்றி!
சில்லறை உண்டியல்
Comments
Post a Comment