பங்குச்சந்தை முதலீடு செய்வதற்கு கணக்கு தொடங்குவது எப்படி? what are the Accounts required for Investing in Share market?
# எழுத்து 1#
வணக்கம் !
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய என்னென்ன கணக்குகள் வேண்டும் என்பதை தமிழில் சுருக்கமாக பார்ப்போம்.
முதலீடு செய்வதற்க்கான தகுதிகள்:
1. 18- வயது பூர்த்தியாகிருக்க வேண்டும்.
2. PAN - அட்டை வைத்திருக்க வேண்டும்.
3. முகவரிக்கான சான்று இருக்க வேண்டும் ( Adhar Card)
4. சேமிப்பு கணக்கு - எதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
SEBI - அனுமதி பெற்ற பங்குச்சந்தை முகவர்களை அணுக வேண்டும்
முகவர் தங்களுக்கு Demat கணக்கு மற்றும் Trading கணக்கு ஆரம்பித்து தருவார்கள்.
Demat A/C ( டி மேட் கணக்கின் பயன்படு):
இந்த டி மேட் கணக்கு நீங்கள் வாங்கும் பங்கு மற்றும் பரிவர்த்தனைகளை கையாள்வதற்கு.
Trading A/c : ( டிரேடிங் கணக்கு பயன்பாடு )
இந்த டிரேடிங் கணக்கு பங்குகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் தேவைப்படும்.
மேலும் தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி !
சில்லறை உண்டியல்.
Comments
Post a Comment